திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற குற்றசாட்டை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரியஅக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும்.
இருபத்தைந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு மறுவெளியீடு காணும் வெள்ளிவிழாப் பதிப்பு.<o:p></o:p>